ஐ.பி.எல். ரி-20 தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
11 ஆவது லீக் போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இதனால் 57 ஓட்டங்கள் விதியசத்தில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளோடு முதலாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
இதேவேளை 12 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 157 ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியோடு சென்னை அணி 4 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

















