இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அதன்படி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையில் பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் கார்பன் நடுநிலைமை தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.















