யாழ்ப்பாணம், நெல்லியடிப் பகுதியில் கைக்குண்டுடன் நபர் ஒருவரைப் பொலிஸார் நேற்று(10) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு யாழில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு இருப்பது பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















