இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னால் குழுவொன்று செயற்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்கொண்ட இலங்கை அணி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த குழுவினர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தமது ஆளுகைக்குள் உட்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் அனைத்து தகவல்களையும் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் ஊடகங்களின் மூலம் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

















