மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட கணவர், தலைமறைவாகியிருந்த நிலையில் 12 வருடங்கள் கழித்து மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், இவர் ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகாத போதிலும் பலப்பிட்டி நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இவர் வெலிகம பிரதேசத்தில் உள்ள விஹாரையொhன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.














