பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வீ ஆர் வன் அமைப்பினர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு பாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தவுள்ளதாக த “வீ ஆர் வன்” (We are One) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் தலைவரான சமூக ஆர்வலர் சுரேன், அமைப்பின் ஊடகப் பேச்சாளர் ரஸ்மின், உபதலைவர் சஜீர் மௌலவி மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி மௌலவி ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















