கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் புதிதாக விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாள் மாநட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற மலையில் புதிய விகாரை அமைக்கப்படுகின்றது.
மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படி படியாக கரைந்து கொண்டிருக்கின்றது.
அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்களதேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது
அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பொரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக்கிராமங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக நடந்தேறி வருகின்றன.
வடக்கில் குறுந்தூர்மலை வெடுக்குநாறிமலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோயக்; கொண்டிருக்கின்றது
மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேய்ச்சல் தரைக் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுன.
அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பொரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.