ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது
இதன்படி ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறதுடன் செப்., 18ம் தேதி முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு இன்று வாக்கு பதிவு இடம்பெற்று வருகின்றது
மேலும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்குமாறு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
















