புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரிக்கும் நோக்கில் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த இக்ரம் எனும் இளைஞன், 24 நாட்களுக்கு முன்னர் நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பை சென்றடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி தனது பணத்தை தொடர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களுக்காக நிதி சேகரிப்பது மட்டுமன்றி, இளைஞர்களை போதைவஸ்துக்கு அடிமையாகாமல் பாதுகாக்க வேண்டும், வறுமையில் வீதிகளில் தவிக்கும் உறவுகளின் தரவுகளை திரட்டி சமூகவலைதளங்கள் ஊடாக உதவி சேகரிக்க வேண்டும் என்ற பல நலத்திட்டங்களுடனேயே இவர் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞனின் செயற்பாட்டுக்கு மக்கள் வரவேற்று அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.