கிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்., போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.