கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுட\ன் காயமடைந்தவர்கள் கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர் அவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மாகந்துர பெரகம சன்ரைஸ் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்த பதினொரு பணிப்பெண்களை கட்டுவன பகுதிக்கு ஏற்றிச் சென்றபோது சாரதிக்கு தூக்கம் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.















