ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்களிடமிருந்து 05 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 04 வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














