மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியைக் குண்டுவைத்துத் தகர்க்கப் போவதாக நேற்று வந்த தொலை பேசி அச்சுறுத்தலையடுத்து அப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்த போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பொன்று நேற்று இரவு வந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதியை பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளதுடன்,கட்டித்தை சுற்றி பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.
மேலும் இன்றைய தினமும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.