• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அபுதாபி இந்து கோவிலில் தீபாவளி  கொண்டாட்டம்

அபுதாபி இந்து கோவிலில் தீபாவளி  கொண்டாட்டம்

Kavipriya S by Kavipriya S
2024/10/29
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் ரூ.700 கோடியில், 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட இந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் மட்டும் தரைத்தளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம்  14 ஆம் திகதி திறந்து வைத்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.

இந்த கோவிலில் இந்துக்களின் முக்கிய தினங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 3ஆம் திகதி  வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.

இன்று மாலை 7.30 மணிக்கு தந்தேராஸ் பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தங்களது வீடுகளில் இருந்து பங்கேற்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனுமன் பூஜை நடக்கிறது.

தொடர்ந்து தீபாவளித் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அன்னகூத் தர்சன் என்ற சிறப்பு நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய திகதிகளில், இந்த 2 நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடக்கிறது.

இதில், குழந்தைகளுக்கான சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் திகதி காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுமக்கள் இணையவழியாக முன்பதிவு செய்ய வேண்டும்.

 அன்னகூத் திருவிழா

இந்தியாவின் வட மாநிலங்களில் அன்னகூத் என்ற பெயரில் உணவு மலைத்திருவிழாவானது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் இந்து கடவுளான கிருஷ்ணருக்கு மலைபோல உணவு வகைகளை குவித்து வைத்து வழிபடுவது வழக்கம். பாகவத புராணத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் கனமழையில் பாதிக்கப்பட்ட போது கோவர்தன் மலையை கிருஷ்ணர் தூக்கி ஊர் மக்களுக்கு குடையாக வைத்து காப்பாற்றியதாக கூறப்பட்டுள்ளது. எனவே தான் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் உணவுகளை மலையாக வழங்கி வழிபடுவது வழக்கம்.

இந்த திருவிழா வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்த 4-வது நாளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதனையொட்டி பாப்ஸ் அமைப்பு அபுதாபி இந்து கோவில் கட்டப்படும் வளாகத்தில் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சைவ உணவுகள் மட்டும் வைக்கப்படும். இதற்காக மொத்தம் 1,100 வகையிலான உணவுகள் பார்வைக்கும் வைத்து, பூஜைகள் செய்யப்படும். அபுதாபி இந்து கோவிலில் அன்னகூத் சிறப்பு நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை கோவில் வளாகத்தில் நடக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் வருபவர்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அறிவிப்பு பலகைகளில் உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு அபுதாபி இந்து கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தரக்கூடும் என்பதால் அதற்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க விசேட வர்த்தமானி வெளியீடு!

Next Post

தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

Related Posts

ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!
இலங்கை

டித்வா சூறாவளிக்கும் பின்னர் காணாமல் போயுள்ள 173 பேர்!

2026-01-26
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
இலங்கை

2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்!

2026-01-26
கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!
இலங்கை

கிவுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியாவில் பொது அமைப்புக்கள் கலந்துரையாடல்!

2026-01-26
Next Post
தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

தடைப்பட்டுள்ள நீர் விநியோகம்

கேரள ஆலய திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரள ஆலய திருவிழாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்!

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

0
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

0
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

0
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

0
கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாச

0
இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26

Recent News

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது

போலி விசாவை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை கைது!

2026-01-26
ஒடுக்குமுறை மூலம் தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்த முடியாது!

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் !

2026-01-26
கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

கேக் , ஸ்வீட் , குக்கீஸ் குழந்தைகளுக்கு கொடுக்கிறீர்களா..? ஆபத்து அறிவோம் !

2026-01-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.