கொக்கிளாய் – சுமல் வாடிய பகுதியில் நேற்று (15) இரவு கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் படுகாயமடைந்து கொக்கிளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இறந்தவர் மற்றுமொரு நபருடன் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் இக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சடலம் கொக்கிளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொக்கிளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















