யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருஷாந்தன் என்ற 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த காலங்களில் நெல் வேலைக்கு உதவியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கரவெட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.