இராணுவச் சட்டத்தை விதிக்கும் முயற்சியில் தோல்வியடைந்ததற்காக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) பதவி நீக்கம் தொடர்பான விசாரணையை தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் திங்களன்று (16) தொடங்கியது.
தென் கொரியாவின் நாடாளுமன்றத்தால் சனிக்கிழமையன்று யூன் சிவிலியன் ஆட்சியை இடைநிறுத்துவதற்கான அவரது குறுகிய கால முயற்சியால் நீக்கப்பட்டார்.
இது நாட்டை பல ஆண்டுகளில் மிக மோசமான அரசியல் கொந்தளிப்புக்குள் தள்ளியது.
பதவி நீக்கத்தை உறுதி செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு சுமார் ஆறு மாதங்கள் கால அவகாசம் உள்ளன.
அவர் பதவி நீக்கப்பட்டால் இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில், யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) பதவி நீக்கம் தொடர்பான நடவடிக்கைகளை தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு முறைப்படி ஆரம்பித்துள்ளது.
யூனுக்குப் பதிலாக பிரதமர் ஹான் டக்-சூ (Han Duck-soo) தென்கொரியாவின் இடைக்காலத் தலைவராக பணியாற்றுகிறார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யூன் பயணத் தடையினை எதிர்கொண்டுள்ளார்.
இதனிடையே, கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாதுகாப்பு புலனாய்வுக் கட்டளையின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை (15) பொலிஸார் கைது செய்ததாக தென்கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் கூறியுள்ளது.
அதேநேரம், இராணுவ சிறப்புப் போர்க் கட்டளைத் தலைவரான குவாக் ஜாங்-கியூனுக்கு எதிராக பிடியாணை கோருவதாகவும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
இராணுவச் சட்ட முயற்சியின் போது நாடாளுமன்றத்திற்கு சிறப்புப் படை வீரர்களை அனுப்பியதாக குவாக் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது படையினருக்கும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் இடையே வியத்தகு மோதலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.
யூன், கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முன்வைத்த இராணுவச் சட்டம், தென் கொரியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முதன்முறையாக, அரசியல் குழப்பத்தை உருவாக்கியது மற்றும் அவரை வெளியேற்றுவதற்கு அழைப்பு விடுக்கும் பெரிய எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.
யூனுக்கு எதிரான பரந்த எதிர்ப்புகள், அவருக்கு ஆதரவாக சிறிய பேரணிகள், அவரது இராணுவச் சட்ட ஆணையிலிருந்து தென் கொரிய தலைநகரை உலுக்கியது.
எனினும், பெரிய வன்முறை அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இராணுவச் சட்டம் ஆறு மணி நேரம் மட்டுமே நீடித்தது, பின்னர் தேசிய சட்டமன்றம் ஒருமனதாக அதை நீக்குவதற்கு வாக்களித்ததைத் தொடர்ந்து சடத்தை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று (14) யூன் இரண்டாவது பதவி நீக்க வாக்கெடுப்பை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.