2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.














