ஹபரணை – மின்னேரியாவில் பேருந்து விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து-யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் ,சிறிபுர பகுதியில் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்த கட்டுநாயக்க தொழிற்சாலை ஒன்றின் தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் ஹபரணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.














