அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (DC)அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது போட்டியானது பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முதலில் துடுப்பாட்டம் செய்ய வைத்தது.
அய்டன் மார்க்ராமின் அரை சதத்தால், அவர்கள் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தனர்.
அய்டன் மார்க்ராம் தவிர மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களையும், ஆயுஷ் படோனி 36 ஓட்டங்களையும் லக்னோ சார்பில் அதிகபடியாக எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் நான்கு விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்து வீசினார்.
160 ஓட்டங்கள் எடுத்தார் வெற்றி என்ற களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர்.
அந்த அணியில் அபிஷேக் போரேல். கேஎல் ராகுல் இருவரும் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்து அசத்தினர் .
போரேல் 51 ஓட்டங்களில் வெளியேறினார், தொடர்ந்து வந்த அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார்.
இறுதியில் 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு டெல்லி 161 ரன்கள் எடுத்தது . இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக முகேஷ் குமார் தெரிவானார்.















