ரஷ்யாவில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டின் இராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்துள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றே நேற்று திடீரென வெடித்துத்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் காரில் இருந்த ரஷ்யா ஆயுதப் படையின் செயல்பாட்டுத் துறையின் துணைத் தளபதியான யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்தார்.
அவரின் காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு மர்ம நபர்களால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியதாகவும், அருகில் இருந்த கட்டடங்களின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை ரஷ்ய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















