பொலிஸ்மா மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவிற்கு உதவ, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) உதவி பொலிஸ் அத்தியட்சர் (ASP) உட்பட நான்கு பேர் கொண்ட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டில், சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கான விசாரணைக் குழு, கடந்த வாரம் முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கூடி, முதற்கட்ட விவாதங்களை நடத்தியது.
விசாரணைக் குழுவில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. சூரசேன தலைமையில் செயல்படுகிறது.















