அமெரிக்காவில் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்கள் திட்டமிடுவதை வொஷிங்டன் வெளியுறவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது.
அதேநேரத்தில், வெளிநாட்டில் உள்ள அதன் தூதரகங்களிடம் புதிய மாணவர் விசா மற்றும் பரிமாற்ற விசா வழங்குவதற்கான நேர்காணல்களை நடத்த வேண்டாம் என்றும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த இடைநீக்கம் தற்காலிகமானது என்றும் ஏற்கனவே விசா நேர்காணல்களைத் திட்டமிட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பொருந்தாது என்றும் செவ்வாயன்று (27) அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகப் பதிவுகளை சரி பார்ப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் தனது கடுமையான குடியேற்ற நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான பரந்த அளவிலான முயற்சிகளின் ஒரு பகுதியாக நாடுகடத்தல்களை அதிகரிக்கவும் மாணவர் விசாக்களை இரத்து செய்யவும் முயன்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பல நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் செவ்வாயன்று ஹார்வர்ட் வளாகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர்கள் எதிர்த்தனர்.














