”தமிழக மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 1,383 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை மீட்குமாறு வலியுறுத்தி மத்திய அரசுக்கு இதுவரை 76 கடிதங்களை தான் எழுதியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.














