பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி சைஃபுல்லா கசூரி (Saifullah Kasuri), புதன்கிழமை பொது வெளியில் மீண்டும் தோன்றினார்.
பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் மற்றும் பிற தேடப்படும் பயங்கரவாதிகளுடன் அவர் ஒரு அரசியல் பேரணி மேடையில் தோன்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனைகளின் வருடாந்திர நினைவு தினமான யூம்-இ-தக்பீரைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் அவர் பங்கெடுத்ததார்.
இதன்போது ஆக்ரோஷமான உரைகளும், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நான் குற்றம் சாட்டப்பட்டேன், இப்போது என் பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது – என்று பஞ்சாப் மாகாணத்தின் கசூரில் நடந்த பேரணியில் கசூரி கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீதின் மகனும், இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான தல்ஹா சயீதும் ஒருவர்.
பஹல்காமில் உள்ள அழகிய பைசரன் புல்வெளியில் நடந்த கொடூரமான தாக்குதலை அவர் ஒருங்கிணைத்ததாக நம்பப்படுகிறது.


















