நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலான கொழும்பு-காலி சாலையிலும், கிராண்ட்பாஸைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததைக் காண முடிந்தது.
அதேநேரம், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் சாலையில் பயணித்த வாகனங்களும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதை சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் காட்டுகின்றன.
இது தவிர கொழும்பின், பல சாலைகளின் ஓரமாகவிருந்த விளம்பரப் பலகைகளும் சாய்ந்து வீழ்ந்துள்ளன.
கிராண்ட்பாஸில் உள்ள செயிண்ட் ஜோசப் அவென்யூவில் ஒரு பெரிய மரம் விழுந்ததில் அருகிலுள்ள ஆறு வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த குடியிருப்புகளில் இருந்தவர்களுக்கு எவ்வித உயர் சேதங்களும் ஏற்படவில்லை.

















