மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்குளி பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதட்கிடையில் , போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.















