நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dream Destination 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஆரம்ப விழா ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை வீதிப் பாதுகாப்பு செயல் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில்வே பிரதம பொறியாளர் மற்றும் தனியார் துறையில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.














