சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு, அடுத்த வாரம் தனது அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த அறிக்கையை இறுதிப்படுத்துவதற்கு முன், மேலும் சில மாணவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன், அது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்படும்.
மேலும், விசாரணையின் போது மாணவர்கள் மற்றும் பிறரிடம் இருந்து 110 மணி நேரத்திற்கும் மேல் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பகிடிவதை காரணமாக சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.















