பிட்கொயின் ஒன்றின் பெறுமதியானது திங்களன்று (14) 120,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியது.
அதன்படி, உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (இலத்திரனியல் நாணயம்) பிட்கொயினின் பெறுமதி திங்களன்று 1.32% அதிகரித்து $120,700.54 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளுக்கு மிகவும் சாதகமான சூழல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பிட்காயினின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை திங்களன்று டிஜிட்டல் சொத்துத் துறைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர் சட்டமூலங்கள் குறித்த விவாதங்களைத் தொடங்கியது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கொள்கைகள் பல ஆண்டுகளாக தொழில்துறையினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் இந்த நடவடிக்கை பிட்கொயினின் அண்மைய ஏற்றத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.















