வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (23) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசாங்கமா அல்லது மத்திய வங்கியா முடிவு செய்துள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி – அரசாங்கமும் மத்திய வங்கியும் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அண்மைய நாட்களில் பல செய்திகள் வந்துள்ளன.
இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
பதில் – அவற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய வங்கி எந்த கவனம் செலுத்தவில்லை. திறக்கப்பட்டுள்ள சந்தைகள் திறந்தே இருக்கும். அரசாங்கத்திற்கும் அத்தகைய நோக்கம் இல்லை.














