திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.















