முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, நபர் ஒருவர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவரது விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.














