2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்தல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கு நவரட்ண மாரசிங்க, பிரதீப் அபேரத்ன மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் ஒரு பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கின் சாட்சிய விசாரணை வேறு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் உள்ள அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.















