எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், மீனவர்கள் நடத்த உள்ள இந்த போராட்டம் காரணமாக 8 துணைக் காவல் கண்காணிப்பாளர் 16 ஆய்வாளர்கள் என 859 பொலிஸார் மற்றும் ரயில்வே பொலிஸார் என நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக தங்கச்சிமடத்தில் குவிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



















