இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது.
‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘ஜெயிலர் 2’ படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார்.
மேலும், நடிகை வித்யா பாலன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் பாகத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதனால்தான் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.


















