ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் என அறியப்படும் கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாக சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்று வருபவர் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.
கெஹல்பத்தர பத்மே மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நான்கு குற்றவியல் கும்பல் உறுப்பினர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் சிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
அந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.














