பிரித்தானியாவில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்த பிரம்மாண்ட பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் ஒரு வேடிக்கை காட்சி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
சனிக்கிழமை, லண்டனில் சுமார் 1.5 லட்சம் பிரித்தானியர்கள் புலம்பெயர்தலுக்கு எதிராக பேரணி நடத்தினர். லண்டனின் அடுக்கு சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும் காட்சி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையோர இந்திய உணவகத்தில் நின்று பஜ்ஜி வாங்கி சாப்பிடும் காட்சி கமெராவில் பதிவாகியுள்ளது. மேலும், பேரணியில் ஈடுபட்ட சிலர் ஆப்கானிஸ்தான் உணவகத்தின் முன் வரிசையில் நிற்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, பார்வையாளர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சமூக ஊடக பார்வையாளர், “பிரித்தானியர்களுக்கு புலம்பெயர்ந்தோர் வேண்டாம், ஆனால் அவர்களுடைய உணவு மட்டும் வேண்டுமா?” எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















