கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் அங்கு சாரதியாக கடமையாற்றும் நிலையில் நீண்ட காலமாக தனது அலுவலக அறையில் குறித்த போதைப்பொருட்களை கவனமாக பொதி செய்து நகராட்சி ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து இருபதாயிரம் மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.















