தனமல்வில வெல்லவாய வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தனமல்வில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளையில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் வேலை நிறைவடைந்த பின்னர் புத்தள பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற வேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை, பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் வேனின் ஓட்டுநரான 18 வயதுடைய சசங்க உதுல சிந்தக உட்பட வேனில் பயணித்த 05 பேர் காயமடைந்து தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓட்டுநரின் தூக்ககலக்கமே வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.















