“அழகான இல்லம் ஆரோக்கியமாபன வாழ்க்கை” எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாட்டின் மலையக சமூகத்தின் வாழக்கை தரத்தினை உயர்த்துவதற்காக இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு செயற்திட்டத்தின் முதற்கட்டமாக 2000 பேருக்கான காணி உரித்து ஆவணங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பண்டாரவளையில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
பெருந்தோட்ட சமூகத்துக்கு வீடொன்றினை வழங்குவது மட்டுமல்லாது தாய்நாட்டிற்கு உந்துசக்தியை வழங்கும் “கௌரவமான பிரஜையாக” மாற்றுவதற்கு அடிப்படை அத்திவாரமாக இந்த திட்டம் அமைகிறது.
மேலும் இந்நாட்டின் பெருந்தோட்ட துறையின் அபிவிருத்தியில் பாரியதொரு பங்களிப்பினை ஆற்றிக்கொண்டிருக்கும் மலையக சமூகம் 2023 ஆண்டுடன் எமது நாட்டிற்கு வருகைதந்து 200 வருடங்களை கடந்து விட்டனர்.
இக்காலப்பகுதியில் அம் மக்கள் இந்நாட்டின் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு வழங்கிய பங்களிப்பு அளப்பறியதாகும்.
மலையக தமிழ் சமூகம் இலங்கையில் பாட்டாளிகளாக, தேசிய ஊழிய படையில் மிகவும் வினைத்திறன் வாய்ந்த தொழிலாளர்களாக கருதப்படுவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கும்.
அபிவிருத்திக்கும் அதிகபட்ச பங்களிப்பினை வழங்கிவருகின்றமை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.
மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேல் இந்நாட்டின் பிரஜைகளாக வாழ்ந்து கொண்டுடிருக்கின்ற சூழலில் அநேகமான அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத, பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தே வாழ்ந்து வருகின்றார்கள்.
மலையக சமூகம் முகம்கொடுக்கின்ற பிரதான பிரச்சினைகளில் முதன்மையானது காணி மற்றும் வீட்டு பிரச்சினைகளேயாகும்.
இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ ஒரு மில்லியனை கொண்டிருக்கும் பெருந்தோட்ட மலையக சமூகத்தின் 67%மான மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது தொடர் குடியிருப்புகளிலே ஆகும்.
மிகவும் குறைந்த அடிப்படை வசதிகளுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், இதற்கு முன்னரும் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டாலும் கூட அவ் வீடுகளை வழங்குவதில் சிறந்த பொறிமுறைமையொன்று காணப்படவில்லை.
அரசியல்வாதிகளின் தனிபட்ட பட்டியல்களுக்கு அமைய அவர்களுக்கு தேவையானவர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தாக குறிப்பிடப்படுகின்றது.
மண்சரிவு, அனர்த்தங்கள் மற்றும் ஆபத்துகள் நிறைந்த சூழலில் வாழும் மலையக மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அதனாலேயே தற்போது பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இவ் மலையக சமூகத்திற்கு வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு செயற்திட்டங்களை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது.
அதில் இந்திய அரசின் உதவியுடன் 10000 வீடமைப்பு திட்டமானது பிரதான செயற்திட்டமாகும்.
அதில் நான்காம் கட்டத்தின் 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரித்திற்கான ஆவணம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.
இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட 10,000 இந்திய வீடமைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டமாக பெயரிடப்பட்டுள்ளதோடு அதன் அடிப்படையில் கடந்த வருடத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட 1300 வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் 4700 வீடுகள் எதிர்வரும் ஆண்டிலும், மிகுதி 4,000 வீடுகள் 2027 ஆண்டளவில் பூர்த்திசெய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் குடியிருக்கும் சமூகத்தின் வாழ்க்கை தரத்தினை உயர்துவதற்கும் பாதுகாப்பான சூழலில் அடிப்படை வசதிகளை கொண்ட வீடுகளை பெற்றுகொடுப்பது இவ் செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
பயனாளிகளின் தெரிவு முறையானது மிகச் சிறந்த முறைக்கமைய இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோட்டத் தொழிலாளியாக இருத்தல் (பதிவு செய்யப்பட்டிருத்தல் / ஓய்வு பெற்றிருத்தல் /பதியப்படாத ஊழியர்கள்)
தோட்ட பிரதேசங்களின் ஐந்து வருடங்களுக்க குறையாத வதிவினை கொண்டிருத்தல்.
தோட்ட தொழிலாளர் கூட்டுறவு வீடமைப்பு சங்கத்தில் உறுப்புரிமை பெற்றிருத்தல்.
முன்னர் வீட்டுத்திட்டத்திற்கான உதவியை பெற்றுக்கொள்ளாதிருத்தல்.
தற்பொழுது தொடர் குடியிருப்புகளில் அல்லது தற்காலிக வீடுகளில் வசிப்பவராக இருத்தல்.
அத்தோடு தற்பொழுது வாழ்ந்து வருகின்ற இடம் அனர்த்தத்திற்கு உட்பட்ட பிரதேசமாக தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் (NBRO) மூலம் உறுதி செய்யப்பட்டிருத்தல்.
மேற்குறித்த காரணிகள் வீடொன்றினை பெற்றுக்கொள்வதற்கு அடிப்படை தகைமைகளாக கருதப்படுவதோடு மேலதிக புள்ளிகள் வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய குடும்பத்தின் பிள்ளைகள் எண்ணிக்கை, அங்கவீனர், வயோதிப வதிவாளர்கள், கூட்டு குடும்பங்களாக வாழ்தல் என்பவை அவற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் வீட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டிற்கு மேலதிகமாக நீர் வழங்கள், மின்சார வசதி, சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள், சனசமூக நிலையங்கள், பிள்ளை பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள், கூட்டுறவு மத்திய நிலையம், சேதன பயிர்செய்கைகான வசதிகள், வாழ்வாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு திட்டங்கள் இதன் மூலம், செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன் இருந்த தொடர் குடியிருப்புக்களுக்கு பதிலாக தங்களுக்கே உரித்தான சொந்த காணியில், இரண்டு அறைகளுடன் கூடிய விராந்தை, சமையல் அறை மலசலகூட வசதிகளுடன் 550 சதுர அடி கூடிய இல்லத்தினை மலையக சமூகத்திற்காக பெற்றுக்கொடுக்ப்படவுள்ளதோடு, இவ் அழகிய இல்லத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 28 இலட்சம் ரூபாவும் இலங்கை அரசாங்கத்தினால் வீட்டின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 04 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த காரணிகள் வீடொன்றினை பெற்றுக்கொள்வதற்கு அடிப்படை தகைமைகளாக கருதப்படுவதோடு மேலதிக புள்ளிகள் வழங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய குடும்பத்தின் பிள்ளைகள் எண்ணிக்கை, அங்கவீனர், வயோதிப வதிவாளர்கள். கூட்டு குடும்பங்களாக வாழ்தல் என்பவை அவற்றில் முக்கியமானதாகும்.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் வீட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீட்டிற்கு மேலதிகமாக நீர் வழங்கள், மின்சார வசதி, சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள், சனசமூக நிலையங்கள், பிள்ளை பராமரிப்பு நிலையங்கள், முன்பள்ளிகள்.
கூட்டுறவு மத்திய நிலையம்,சேதன பயிர்செய்கைகான வசதிகள், வாழ்வாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு திட்டங்கள் இதன் மூலம், செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன் இருந்த தொடர் குடியிருப்புக்களுக்கு பதிலாக தங்களுக்கே உரித்தான சொந்த காணியில், இரண்டு அறைகளுடன் கூடிய விராந்தை, சமையல் அறை மலசலகூட வசதிகளுடன் 550 சதுர அடி கூடிய இல்லத்தினை மலையக சமூகத்திற்காக பெற்றுக்கொடுக்ப்படவுள்ளதோடு.
இவ் அழகிய இல்லத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 28 இலட்சம் ரூபாவும் இலங்கை அரசாங்கத்தினால் வீட்டின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 04 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் யாதெனில் வீட்டோடு வழங்கப்படும் காணி தேசிய கட்டடிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) பரிசீலனை செய்யப்பட்டு, அனர்த்தங்கள் ஏற்படாது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளடையும் மிகவும் அழகான சூழலில் உயர்ந்த பெறமதியுடன் கூடியதாக அமைதலே இதன் சிறப்பம்சமாகும்.
இவ் அனைத்தையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் 12ம் திகதி பண்டாரவளை நகரசபை பொது மைதானத்தில் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களினால் மலையக சமூகத்தின் பயனாளிகளுக்கு வீட்டு உரித்திற்கான ஆவணம் வழங்கப்படவுள்ளது.
இச் சந்தர்பத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் உட்பட இன்னும் பல அமைச்சர்களும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.














