அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது
அதன்படி, புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.














