இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று எகிப்துக்கு செல்வதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இதேவேளை, காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காகவும், இஸ்ரேலுக்கு நீண்டகாலமாக அளித்து வரும் ஆதரவிற்காகவும் டிரம்ப் இஸ்ரேலின் மிக உயர்ந்த சிவில் கௌரவத்தைப் பெறுவார் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனல்டுட் டிரம்ப் முன் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



















