கல்கிசை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், கல்கிசை தலைமையக பொலிஸ் அதிகாரி மற்றும் பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பொலிஸ் அதிகாரியை வார்த்தைகளால் அச்சுறுத்தியதாகவும், அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி, தன்னைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக வன்னிநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.














