அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட நிலத்தடி வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (28) அதிகாலையில் சிட்னியில் இருந்து வடமேற்கே 700 கிமீ (435 மைல்) தொலைவில் உள்ள கோபரில் உள்ள எண்டெவர் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
வெடிப்பில் சம்பவ இடத்திலேயே 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்துவிட்டதாகவும், 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டும் உள்ளனர்.
பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், காது கேளாமை மற்றும் அதிர்ச்சி உள்ளிட்ட சிறிய காயங்களுக்குள்ளான இரண்டாவது பெண் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாநில பணியிட பாதுகாப்பு ஆணையத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எண்டெவர் சுரங்கத்தின் வலைத்தளத்தின்படி, சுரங்கம் 1982 முதல் 2020 வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இது 2023 ஆம் ஆண்டில் பாலிமெட்டல்ஸ் ரிசோர்சஸால் வாங்கப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு வெள்ளி, துத்தநாகம் மற்றும் ஈய உலோக உற்பத்திக்கான சுரங்க நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














