இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது.
இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது.
பிரதமர் சர் கியர் ஸ்டார்மர், உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை ஹோட்டல்களில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
ஹோட்டல்கள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.














