இங்கிலாந்தின் மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூவின் “இளவரசர்” பட்டத்தை பறிக்க மன்னர் முடிவு செய்த நிலையில் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் சகோதரர் மன்னரை பாராட்டியுள்ளார்.
ஆனால் ஆண்ட்ரூ சிறையில் அடக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து இங்கிலாந்தின் இராணுவ ரிசர்வ் படையின் முன்னாள் மூத்த அதிகாரி அலஸ்டர் புரூஸ் கருத்து தெரிவித்துளளார்.
இதில், ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை நீக்க மன்னரின் “குறிப்பிடத்தக்க” நடவடிக்கையை “மிகப்பெரிய அவமானம்” என்று அவர் விவரித்துள்ளார்.
இதேவேளை, ஆண்ட்ரூ மன்னரின் சகோதரர் என்பதால் அவரது பட்டன்களை பறிப்பதும் அவரது இந்த சம்பவமும் மன்னருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சவாலாக இருந்திருக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முடியாட்சி என்பது அவரது முக்கியப் பொறுப்பு மற்றும் தேசத்திற்கு சேவை செய்வது, மேலும் இந்த கொடூரமான எப்ஸ்டீன் குற்றச்சாட்டுகளுக்கும் அதற்கான அனைத்து வழிமுறைகளுக்கும், அவர் செய்யும் பணிக்கும் இடையில் ஒரு தூரத்தை வைக்க மன்னர் விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்கு இது முற்றிலும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆண்ட்ரூ வெளியேற்றப்பட்டாலும் அவர் இன்னும் ‘ மன்னரின் குடும்பத்தின் ஒரு பகுதியாக” இருப்பதாகவும், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற பெரிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் புரூஸ் மேலும் கூறினார்.


















