ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க அரசாங்கம் 50,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது என்று அவரது உயர் பணியாளர் அதிகாரி கூறினார்.
புதிய ஊழியர்கள் பெரும்பாலும் தேசிய பாதுகாப்பு பதவிகளில் உள்ளனர்.
இது நிர்வாகத்தின் கொள்கை கவனத்தை பிரதிபலிக்கிறது.
புதிய பணியாளர்களில் பெரும்பாலோர் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்தில் பணிபுரிகின்றனர் என்று மத்திய அரசின் மனிதவள பணிப்பாளர் ஸ்காட் கூப்பர் வியாழக்கிழமை (13) இரவு ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
இந்த ஊழியர்கள் மாற்றங்கள், அரசாங்கத்தை மறுசீரமைக்கும் அதே வேளையில், ஏனைய கூட்டாட்சி வேலைகளையும் கடுமையாகக் குறைக்கும் ட்ரம்பின் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு வருவாய் சேவை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை போன்ற அரசாங்கத்தின் ஏனைய பகுதிகளில் தொழிலாளர்களை பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் செய்வதை முடக்கிய அதே வேளையில், நிர்வாகம் புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.
இந்த ஆண்டு சுமார் 300,000 தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கிறது என்று ஆகஸ்ட் மாதம் கூப்பர் கூறினார்.
2.4 மில்லியன் பலம் கொண்ட கூட்டாட்சி சிவில் பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தைத் தொடங்க ட்ரம்ப் ஜனவரி மாதம் பில்லியனர் எலோன் மஸ்க்கை நியமித்தார்.
சிவில் உரிமைகள் சட்டங்களை அமுல்படுத்துதல், வரி வருவாய் வசூலித்தல் மற்றும் சுத்தமான எரிசக்தி திட்டங்களை மேற்பார்வையிடுதல் ஆகிய பொறுப்புகளை வகித்த ஊழியர்களை ட்ரம்பின் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
குறைப்பின் ஒரு பகுதியாக, சுமார் 154,000 ஊழியர்கள் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு சலுகையை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நடவடிக்கை வானிலை முன்னறிவிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் விண்வெளித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரசாங்க நடவடிக்கைகளை பாதித்தது.


















