கிழக்கு ஒன்ராறியோவில் இரண்டு சிறிய விமானங்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துளள்தாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை (15) காலை 11 மணிக்குப் பிறகு தெற்கு க்ளென்கேரியில் உள்ள மார்ட்டின்டவுனுக்கு வடக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினை அடுத்து ஒரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், மற்றொரு விமானம் காட்டுப் பகுதியில் வீழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த ஒரே விமானி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.















