புதிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதேவேளை, அவர் அவசரத்தில் இருக்கும் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார்.
சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்கொள்வதற்காக விரைவாக அவர் முன்வைத்துள்ள கடுமையான மற்றும் தீவிரமான சீர்திருத்தங்களால் விமர்சகர்களால் அவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் இவற்றின் இந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான சீர்திருத்தம் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக முக்கியமான சீர்திருத்தங்களாகக் கருதப்படுகின்றன.
சட்டவிரோத குடியேற்றம் நமது நாட்டைப் பிளவுபடுத்துகிறது எனவும் அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்.
இது அவரது கட்சியிலேயே சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறார்.
அவருடைய இந்த தீவிர அணுகுமுறை, பழமைவாதிகள் மற்றும் சீர்திருத்தக் கட்சியின் தீவிர வலதுசாரி கொள்கைகளிலிருந்துவரும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த அறிக்கைகள், கட்சியில் நிலவும் குழப்பமான சூழ்நிலையில், மஹ்மூத்தின் தலைமைத்துவத்திற்கான தொடக்க முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.














